இந்து மதத்தின் அற்புதங்கள்: நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன . சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது . திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது . நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும் , ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார் . வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள் , வண்டுகள் அரிப்பதில்லை . திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது . ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார் . மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர் . கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் ச...