சத்குருவின் கேள்வி-பதில் உரை Isha இணைய தளத்தில் இருந்து: கேள்வி: கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும், ஒரு யோகியை பார்த்தால் காலில் விழவேண்டும், பெற்றோர், பெரியவர்களைப் பார்த்தால் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற வேண்டும், போன்ற வழக்கங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் விஞ்ஞானப்பூர்வமான அடிப்படை உள்ளதா? சத்குரு: காலைத் தொட்டு வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு. கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம். பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே அவர்கள்தான் காரணம். நாம் கடவுளை இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொன்னது கூட பெற்றோர்தானே? எனவே நாம் இருப்பதற்கு மூலகாரணமான அவர்களை நாம் வணங்குகிறோம். யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமான ஒரு நிலை. இதன் விஞ்ஞானத்தைச் சொல்வதென்றால்,...