காய்கறி தோட்டம் உங்கள் வீட்டு மாடியில் ...... வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது . " நீங்களே செய்து பாருங்கள் ' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை ( டிச .18, 2013) தொடங்கப்பட்டது . இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ . தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது . இந்தத் திட்டத்தின் கீழ் , வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள் , உரங்கள் , பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன . என்னென்ன காய்கறிகள் : கத்தரி , வெண்டை , தக்காளி , மிளகாய் , அவரை , கொத்தவரை , முள்ளங்கி , கீரைகள் , கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம் . இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது . இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும் . மாடித் தோட்ட...