தடுப்பூசி நாள் எஸ்.எம்.எஸ்.ஸில் வரும்:
குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பல்வேறு தடுப்பு ஊசிகளை போட வேண்டியுள்ளது. ஆனால் பலரும் இதை மறந்து விடுவதும் நடக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் தடுப்பு ஊசி போடும் நாள் வருவதற்கு முன் அது குறித்து நினைவுபடுத்தும் ஒரு சேவை தொடங்கப்பட்டுள்ளது. alertable என்ற இணையதளம் மூலமான இந்த சேவையை கொச்சியை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் சிலர் இணைந்து தொடங்கியுள்ளனர்.
www.alertable.in என்ற இணையதளத்தில் குழந்தையின் விவரங்களை ஒரு முறை பதிவு செய்தால் பின்னர் உரிய காலங்களில் நினைவுறுத்தல் எஸ்எம்எஸ்கள் செல்ஃபோனுக்கு வந்துவிடும். குழந்தையின் பிறந்த நாள் அடிப்படையில் எந்தெந்த தேகளில் எந்தெந்த தடுப்பூசிகளை போட வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களும் இத்தளத்தில் தரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment