அக்டோபர் 1, உலக முதியோர் தினம்... (October 1, 2013)
PLEASE SCROLL DOWN TO READ IN ENGLISH :
உலகம் முழுவதும் இன்று (அக்டோபர் 1) உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் 1991 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் நடை முறை படுத்தப்பட்டது.
இன்று, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி எனும் ஊரில் உள்ள "கல்லிடை சமூக சேவா டிரஸ்ட்" மூலம் இயங்கி கொண்டிருக்கும் "விஸ்ராந்தி நிலையம்" எனும் முதியோர் நிலையம் செல்லும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது.
இங்கு, மிகவும் வயது முதிர்ந்த முதியோர்கள் ஏறக்குறைய 35, நபர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.அவர்களுக்கு தேவையான உணவு,உடை,தங்குமிடம், சரியான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் மனதினை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை மிக, மிகக் கனிவான சேவையாக செய்து வருகிறார்கள்.
மிகச்சரியான இடைவெளியில் உணவு, தேனீர் மற்றும் பால், படிப்பதற்கு செய்திதாள்கள், பல ஆன்மிக நூல்கள், சிறிது நேரம் தொலைக்காட்சி, முடிந்தவரை இறை பாடல்கள் (பஜனை) என இவற்றை நேரில் பார்க்கும் பொழுது உங்கள் மனம் உருகிப்போவது நிச்சயம்.
2005 ஆம் ஆண்டு முதல் "ஜன கல்யாண்" என்ற பெயரில் இயங்கி வந்த முதியோர் இல்லம், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் "விஸ்ராந்தி நிலையம்" என்று செயல் பட்டு வருகிறது.
இங்குள்ள அனைவருக்கும் ஒரு நாள் உணவு அளிக்க ரூபாய் 5000 செலவு ஆவதாக கூறினார்கள். (மதிய உணவு மாத்திரம் அளிக்க ருபாய் 2000)
உங்கள் இல்ல விசேஷ நாட்களுக்கோ, குழந்தைகள் பிறந்த நாட்களுக்கோ நீங்கள் இங்கு உணவு அளிக்க விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்காகவும், உங்களது கோரிக்கைகளை சொல்லியும் இந்த 35 முதியோர்களும் 2 நிமிடம் கூட்டுப்பிரார்த்தனை செய்து விட்டு அதன் பின்னரே உண்ண தொடங்குவார்கள்....
நீங்கள் திருநெல்வேலி வரும் வாய்ப்பு கிடைத்தால், கல்லிடைக்குறிச்சியில் உள்ள இந்த முதியோர் நிலையம் ஒரு முறை சென்று வாருங்கள்.
அவர்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் இல்லம் செழிப்பாக உதவும் என்பதில் சிறிதும்ஐயம் இல்லை.
Editor's Note:
இந்த இணைய தளத்திற்கும் (www.kadavuleh.blogspot.com) "விஸ்ராந்தி நிலையத்திற்கும்" எந்த வகையிலும் தொடர்பு கிடையாது . இன்று நேரடியாக சென்று பார்த்ததில், மனதைத்தொட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்... அவ்வளவு தான்...
முடிந்த வரை "முதியோர் இல்லங்கள்" என்பதே இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை. ஆனால், மகன், மகள் என்று வேறு ஒருவரும் அரவணைக்க வழி இல்லாத நிலையில் உள்ளவர்களின் வலி துடைக்க பாடுபடும் "விஸ்ராந்தி நிலையம்" போன்ற முதியோர் இல்லங்களுக்கு முடிந்தவரை உதவிடுவோம் !!! நம்மால் முடியும் வரை உதவிடுவோம் !!!
வாழ்க வளமுடன் !!!
ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
Today, (October 1) World Elders Day:
The "World Elders Day" has been declared by United Nations Organisation in the year 1991.
Fortunately, today I got an opportunity to visit the "Vishranthi Nilaiyam" Old Age Home, which is located in Kallidaikurichi, Tirunelveli District, Tamil Nadu, India. It is running by "KALLIDAI SEVA TRUST". (35 KM from Tirunelveli, 45 Minutes travel by Car)
The Trust taking care of 35 old age people's food, accommodation, clothes and routine medical check up. Apart from this, the kindness care given by the Team members are very excellent and I cannot explain in words...
Food, Tea and Milk in proper timing, Newspapers and Devotional books for reading, Television for entertainment (only 1.5 hours) and then Chanting of Bajan songs.... All things are well planned to give satisfaction to the old age people.
In the year 2005 it was in the name of "Jana Kalyan" and from July 2011 onward it is running by "KALLIDAI SEVA TRUST" in the name of "VISHRANTHI NILAIYAM"....
Here, to maintain all those things they are spending Rs. 5000 per day (three times food).
Rs. 2000 only for Lunch with Sweet and Vadai. All, 35 people will pray 2 minutes for your family wealth, health or as per your request. (You can mention the correct term, like Business prosperity, Birthday wishes, Wedding anniversary wishes etc, etc...)
Their heartfelt wishes will make our life and home better... there is no doubt on that...
If you want to donate then please contact the below address. Many of the people are donating on their Family functions like Marriage, Birthday or any other special occasion.
(If you are able to speak only in English, then please contact the Managing Trustee Dr. G. Badmanabhan (+ 91 9345 738 410). If you are able to speak in Tamil, then please contact the Manager Mr. Jaya Shankar (+91 76394 66085) who is taking care of all ground work.
If you have a chance / plan to visit Tirunelveli, then plan to visit this "Vishranthi Nilaiyam" also.
Editors Note:
Kindly note that the Editor of www.kadavuleh.blogspot.com is no way related with this "Vishranthi Nilaiyam"... Inspired and shared the details because of today's direct visit....
Vazhga Valamudan !!!
Few pictures for your views:
Comments
Post a Comment