Skip to main content

விஸ்ராந்தி நிலையம் ஒரு பார்வை ... International Day for Elder Persons - October 1


அக்டோபர் 1, உலக முதியோர் தினம்... (October 1, 2013)

PLEASE SCROLL DOWN TO READ IN ENGLISH :



உலகம் முழுவதும் இன்று (அக்டோபர் 1) உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் 1991 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் நடை முறை படுத்தப்பட்டது. 

இன்று, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி எனும் ஊரில் உள்ள "கல்லிடை சமூக சேவா டிரஸ்ட்" மூலம் இயங்கி கொண்டிருக்கும் "விஸ்ராந்தி நிலையம்" எனும் முதியோர் நிலையம் செல்லும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. 

இங்கு, மிகவும் வயது முதிர்ந்த முதியோர்கள் ஏறக்குறைய 35, நபர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.அவர்களுக்கு தேவையான உணவு,உடை,தங்குமிடம், சரியான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் மனதினை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை மிக, மிகக் கனிவான சேவையாக செய்து  வருகிறார்கள். 

மிகச்சரியான இடைவெளியில் உணவு, தேனீர் மற்றும் பால், படிப்பதற்கு செய்திதாள்கள், பல ஆன்மிக நூல்கள், சிறிது நேரம் தொலைக்காட்சி, முடிந்தவரை இறை பாடல்கள் (பஜனை) என இவற்றை நேரில் பார்க்கும் பொழுது உங்கள் மனம் உருகிப்போவது நிச்சயம்.

2005 ஆம் ஆண்டு முதல் "ஜன கல்யாண்" என்ற பெயரில் இயங்கி வந்த முதியோர் இல்லம், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் "விஸ்ராந்தி நிலையம்" என்று செயல் பட்டு வருகிறது.

இங்குள்ள அனைவருக்கும் ஒரு நாள் உணவு அளிக்க ரூபாய் 5000 செலவு ஆவதாக கூறினார்கள். (மதிய உணவு மாத்திரம் அளிக்க ருபாய் 2000)

உங்கள் இல்ல விசேஷ நாட்களுக்கோ, குழந்தைகள் பிறந்த நாட்களுக்கோ நீங்கள் இங்கு உணவு அளிக்க விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு  கொள்ளலாம். உங்களுக்காகவும், உங்களது கோரிக்கைகளை சொல்லியும் இந்த 35 முதியோர்களும் 2 நிமிடம் கூட்டுப்பிரார்த்தனை செய்து விட்டு அதன் பின்னரே உண்ண தொடங்குவார்கள்....

நீங்கள் திருநெல்வேலி வரும் வாய்ப்பு கிடைத்தால், கல்லிடைக்குறிச்சியில் உள்ள இந்த முதியோர் நிலையம் ஒரு முறை சென்று வாருங்கள். 

அவர்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் இல்லம் செழிப்பாக உதவும் என்பதில் சிறிதும்ஐயம் இல்லை.

Editor's Note:
இந்த இணைய தளத்திற்கும் (www.kadavuleh.blogspot.com) "விஸ்ராந்தி நிலையத்திற்கும்"  எந்த வகையிலும் தொடர்பு கிடையாது . இன்று நேரடியாக சென்று பார்த்ததில், மனதைத்தொட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்... அவ்வளவு தான்...

முடிந்த வரை "முதியோர் இல்லங்கள்" என்பதே இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை. ஆனால், மகன், மகள் என்று வேறு ஒருவரும் அரவணைக்க வழி இல்லாத நிலையில் உள்ளவர்களின் வலி துடைக்க பாடுபடும் "விஸ்ராந்தி நிலையம்" போன்ற முதியோர் இல்லங்களுக்கு முடிந்தவரை உதவிடுவோம் !!! நம்மால் முடியும் வரை உதவிடுவோம் !!!

வாழ்க வளமுடன் !!!


ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

Today, (October 1) World Elders Day:

The "World Elders Day" has been declared by United Nations Organisation in the year 1991.

Fortunately, today I got an opportunity to visit the "Vishranthi Nilaiyam" Old Age Home, which is located in Kallidaikurichi, Tirunelveli District, Tamil Nadu, India.  It is running by "KALLIDAI SEVA TRUST". (35 KM from Tirunelveli, 45 Minutes travel by Car)

The Trust taking care of 35 old age people's food, accommodation, clothes and routine medical check up. Apart from this, the kindness care given by the Team members are very excellent and I cannot explain in words...

Food, Tea and Milk in proper timing, Newspapers and Devotional books for reading, Television for entertainment (only 1.5 hours) and then Chanting of Bajan songs.... All things are well planned to give satisfaction to the old age people. 

In the year 2005 it was in the name of "Jana Kalyan" and from July 2011 onward it is running by "KALLIDAI SEVA TRUST" in the name of "VISHRANTHI NILAIYAM"....

Here, to maintain all those things they are spending Rs. 5000 per day (three times food).
Rs. 2000 only for Lunch with Sweet and Vadai.  All, 35 people will pray 2 minutes for your family wealth, health or as per your request. (You can mention the correct term, like Business prosperity, Birthday wishes, Wedding anniversary wishes etc, etc...)

Their heartfelt wishes will make our life and home better... there is no doubt on that...

If you want to donate then please contact the below address. Many of the people are donating on their Family functions like Marriage, Birthday or any other special occasion. 
(If you are able to speak only in English, then please contact the Managing Trustee Dr. G. Badmanabhan (+ 91 9345 738 410). If you are able to speak in Tamil, then please contact the Manager Mr. Jaya Shankar (+91 76394 66085) who is taking care of all ground work. 

If you have a chance / plan to visit Tirunelveli, then plan to visit this "Vishranthi Nilaiyam" also. 


Editors Note: 
Kindly note that the Editor of www.kadavuleh.blogspot.com is no way related with this "Vishranthi Nilaiyam"... Inspired and shared the details because of today's direct visit....

Vazhga Valamudan !!!

Few pictures for your views:










Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க...

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக...

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் ...

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அ...

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: May...

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் ...

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and ...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டன...