ஓஷோ சொன்ன கதை... ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும். ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது. அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள். தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது. அண...