டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: சுந்தரி
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..
டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..
===========
முனுசாமி : (டாக்டரிடம்) : எங்க வீட்டு நாய் சரியா குறைக்க மாட்டேங்குது…பாருங்க…
டாக்டர் : ரூபாய் 100 ஆகும்…
முனுசாமி : ரொம்ப அதிகம் டாக்டர்…கொஞ்சம் குறைங்க..
டாக்டர் : நான் குறைச்சா நாய் குறைக்காது….???
============
“டாக்டர்! ரெண்டு கண்ணையும் மூடவே முடியல…”
“இனிமேல் அந்தக் கவலை உங்களுக்கு வேணாம்!”..!!!??? நம்மகிட்டே வந்துட்டீங்கள்ல ...
===========
என் கணவர்கிட்டேயிருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக்
கொடுங்க வக்கீல் சார்!
ஏன் என்ன காரணம்?
…டி.வி.லேயிலே மெகா சீரியல் பாரக்கிறப்ப கிரிக்கெட்டு
மாத்திடுறார்..!
============
டாக்டர் ஏன் காதில் பஞ்சை வெச்சிருக்கார்.
மயக்க மருந்து ஸ்டாக் இல்லே. ஆபரேஷன்போது பேஷன்ட் போடும் கூச்சலைத் தாங்க.
ஆபரேஷன் முடிஞ்சதும் என்ன செய்வார் பஞ்சை?
பேஷண்ட் மூக்கில் வெச்சிருவார்
============
கேட்டது
(நெல்லை நகைக்கடை அருகே கணவன் - மனைவி பேசிக் கொண்டது)
""நான் உனக்குக் கம்மல் வாங்கிக் குடுத்ததை எங்க அம்மா காதுல போட்டுடாதே''
""நீங்க வாங்கிக் குடுத்தது எனக்கு. அப்புறம் எப்படி உங்க அம்மா காதுல போடுவேன்?''
=========
(காட்டாங்குளத்தூர் நண்பர் வீட்டில்)
பாட்டி: என்னோட பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரப் போறே?
சுட்டிப் பேரன்: ஒரு ஃபுட் பால்
பாட்டி: என்னாலே ஓடியாடி, விளையாட முட
ியாதே
சுட்டிப் பேரன்: என்னுடைய பிறந்த நாளுக்கு நீ மட்டும், பகவத்கீதை புத்தகம் பரிசாகத் தந்தாயே. அதுக்காகத்தான் இப்படி பழி வாங்கறேன்!
===================
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம்பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
==========
பூ : உடம்பெல்லாம் கண்ணாபின்னான்னு வேர்க்குது டாக்டர்
டாக்டர் : கவலைபடாதீங்க ..உட்காருங்க செக் பண்ணிடலாம்
பூ : நான் செக்கிங்க்கு வரலை டாக்டர் ..உங்க ரூம் ஏசி-ல கொஞ்சம் உட்கார்ந்துட்டு போலாம்ன்னு வந்தேன்...
=============
இன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்
எதுக்குய்யா ?
என் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்
=============
சார்.. . உங்க டி.வி ரிமோட் கண்ட்ரோல் பவரைக் கொஞ்சம் குறைக்க முடியுமா ?
ஏங்க ?
நீங்க சேனல் மாத்தினா, எங்க வீட்டு டி.வி-யிலயும் சேனல் மாறிடுது. . .
===============
மூக்குல கங்கை மாதிரி தண்ணி கொட்டிட்டே இருந்துச்சுன்னு சொல்லி மருந்து வாங்கிட்டுப் போனீங்களே.. . இப்படி எப்படி இருக்கு ?
பரவாயில்லை டாக்டர்.. . இப்ப கிருஷ்ணா மாதிரி சொட்டு சொட்டாத்தான் தண்ணி வருது
==================
என் மர்மக் கதையைப் படிச்சிப் பார்த்தீங்களா ? எப்படி இருக்கு ?
பத்து தடவை திரும்பித் திரும்பிப் படிச்சுப் பார்த்தும், கதையே கொஞ்சம் கூடப் புரியாமல், ரொம்ப மர்மமா இருந்தது!!!
===============
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அந்த கஷடத்துல என் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க. !!!
============
பொன்னாடையை தோளில் போர்த்தாம எதுக்கய்யா
இடுப்பில் கட்டி விடறே?
மப்புல வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாம பேசிக்கிட்டு
இருக்கீங்க தலைவரே…!
===================
என்னிக்கும் இல்லாம, இன்னைக்கு ஏன் தலைவரே தூங்கி
எழுந்ததும் கண்ணாடியில் உங்க முகத்தைப் பார்த்தீங்க…
ஏன்..என்னாச்சு?
உங்களை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்கு.!
===============
ரவுடி ரங்கன் ஏதோ காலேஜ் ஆரம்பிச்சிருக்கானாமே என்ன?
கொலை மற்றும் அறிவியல் கல்லுரியாம்…!
=================
அம்மா, நாங்க புதுசா ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்கப் போறோம். உங்களால் ஏதாவது தர முடியுமா?
தாராளமா, என்னோட மாமியாரையும் மாமனாரையும் தர்றேனே.
==============
மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க?
தண்ணி அடிச்சுட்டு, எப்பப்பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?
============
குவார்ட்டர் கோவிந்தன் : டாக்டர், நான் போதைல தெரியாம ஒரு எலியை உசுரோட முழுங்கிட்டேன். என்னை காப்பாத்துங்க!
டாக்டர் : இந்தாங்க, இந்த எலிமருந்தை சாப்பிட்டுங்க. எலி செத்திடும். அப்புறம் ஈசியா வெளியில் எடுத்திடலாம்!
============
அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில் முன் பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..
தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும் சிக்கன், மட்டன் என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்.
பார்த்தவர்கள் வியந்தார்கள்.
ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?
அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க. அந்த வௌஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?
===================
வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?
ஆமாங்க, இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..
==============
சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?
கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.
கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.
அப்போ பின்னாடி.
அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.
===============
கணவன்: `தொப்பு’ன்னு சத்தம் கேட்டுதே… கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா!
மனைவி: முடியாது! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது!
=============
நோயாளியின் உறவினர்: டாக்டர், ஆபரேஷன் எவ்வளவு நேரம் நடக்கும்?”
டாக்டர் : ஐந்து நிமிஷத்துலயும் முடியலாம், ஐந்து மணி நேரமும் ஆகலாம். எதுவும், நோயாளியோட உயிர் போறதை வைச்சுத்தான் சொல்ல முடியும்!
Comments
Post a Comment