பற்கள்பாதுகாப்பு-சிறுதகவல்:
பல் வலியின் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும் இதற்கு கிராம்பு, துளசிச் சாறு, கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட ஈறுகளில் தடவ உடனே வீக்கம் குறையும்.
பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்க :
வெங்காய சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க வேண்டும். இம்மாதிரி வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறைபடியாமலும் வெண்மையாகவும் இருக்கும்.
வாய் துர்நாற்றம் போக:
1. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதிபடும்.
2. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும்.
பல் கூச்சம் குணமாக:
புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து தூளாக்கி காலை மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கும்.
பற்கள் உறுதியாக இருக்க:-
மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும்.
நாவறட்சி நீங்க :
நாவறட்சி உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீரில் ஒரு மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.
உதடுகள் சிவப்பாக மாற :
புதிதாகச் செடியில் பறித்த கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.
உள்நாக்கு வளர்ச்சி நிற்க (டான்சில்) :
கரிசலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும். மிகக் குளிர்ச்சியான உணவு வகைகளை நீக்கவும்.
பல் ஈறுகளில் புண் குறைய - கருவேலமரம்பட்டை, வாதுமைத் தோல் இவற்றை கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.
Comments
Post a Comment