Skip to main content

Posts

Showing posts from February, 2012

World Biggest Temple - Angkor Wat அங்கோர் வாட்

அங்கோர் வாட் (கம்போடியா விஷ்ணு கோவில் ): உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது  உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள்  என்பது தெரியுமா ? அது தான் "கம்போடியா" நாட்டில் நம்  (தமிழர்களின்)  கலைத்திறமையை உலகிற்கே  காட்டிய "அங்கோர்  வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" என்ற மன்னன் இந்த  இடத்தை  கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட  கோயிலை  இங்கு கட்டினான்.இந்த இடம் தான்  அவனின் தலை  நகரமாக செயப்பட்டது . "விஷ்ணு"  கடவுளுக்காக  கட்டப்பட்ட இந்த கோயிலானது தான்  இன்று வரை  உலகில் கட்டப்பட்ட  வழிபாட்டு  தலங்களிலேயே மிகவும் பெரியது ! !. இரண்டாம் சூர்யவர்மன்...   அங்கோர் வாட் என்றால் தற்போது "City Temple"  என்று  அழைக்கப்படுகிறது.  முன்னர்,  வடமொழியில் இது "Vara  Vishnulokha" (வர விஷ்ணு  லோகம்) என்று  அழைக்கப்பட்டுள்ளது.  இந்த கோயிலை ஒரு கலை  பொக்கிஷம் என்றே  கூறலாம்... திரும்பிய திசை  எல்லாம் சிற்பங்களை 

மஹா சிவ ராத்திரி 2012

மஹா சிவ ராத்திரி - ஒரு முழு தகவல் தொகுப்பு: மஹா சிவ ராத்திரி: 20-02-2012  மெய்யன்பர்களுக்கு வணக்கம். இந்த வருடம்(2012) "மஹா சிவ  ராத்திரி" February 20 அன்று வருகிறது. சிவ ராத்திரி பற்றிய ஒரு முழு தகவல் தொகுப்பாக இந்த கட்டுரை இருப்பதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் (முழுவதும் படித்து விட்டு)... நன்றி... சிவனுக்கு உரிய விரதங்கள்: சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை  கந்தபுராணம்  குறிப்பிடுகிறது.  சோம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேசுவர விரதம், மஹா  சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் ,  ரிசப விரதம்  என்பன அவையாகும். மஹா சிவராத்திரியானது சிவனுக்கு உரிய  இரவு என பொருள்படும். மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் மஹா சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும். மஹா சிவ ராத்திரி எப்படி கணக்கிடப்படுகிறது ? ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான  சதுர்த்தசி  திதி ஆகும். சிவன் அழ