Skip to main content

மஹா சிவ ராத்திரி 2012

மஹா சிவ ராத்திரி - ஒரு முழு தகவல் தொகுப்பு:

மஹா சிவ ராத்திரி: 20-02-2012 

மெய்யன்பர்களுக்கு வணக்கம். இந்த வருடம்(2012) "மஹா சிவ  ராத்திரி" February 20 அன்று வருகிறது. சிவ ராத்திரி பற்றிய ஒரு முழு தகவல் தொகுப்பாக இந்த கட்டுரை இருப்பதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் (முழுவதும் படித்து விட்டு)... நன்றி...



சிவனுக்கு உரிய விரதங்கள்:

சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேசுவர விரதம், மஹா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும்.
மஹா சிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் மஹா சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.

மஹா சிவ ராத்திரி எப்படி கணக்கிடப்படுகிறது ?


ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மஹா சிவராத்திரி ஆகும்.


ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில், மாசி மாத கிருஷ்ண பட் சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மஹா சிவராத்திரி எனப்படும். 


உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மஹா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.



சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.


சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.


காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.


இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.




மஹா சிவ ராத்திரி சிறப்புகள்:
  • வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்) அஸ்திரத்தை பெற்றது இந்த நாளில் தான்.
  • கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்தது  இந்த நாளில் தான்.
  • பகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது  இந்த நாளில் தான்.
  • தன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்தது  இந்த நாளில் தான்.
  • பார்வதி தேவி தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் கூறுகின்றது.
புராண விளக்கங்கள்:
மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுபவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.
மேலும் ஒரு சில புராண விளக்கங்களை நேரமின்மையால் விரிவாக எழுத இயலவில்லை. (மன்னித்தருள்க ...)

பூஜை முறை:

சிவராத்திரியின் போது இரவு நான்கு பொழுதாக (சாமம்) பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு பொழுதுகளிலும்  சிவலிங்கத்துக்கு சிறப்பு  அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அப்போது  எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் கால பூஜை :

இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம் கொண்ட கலவை) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாவது கால பூஜை :

இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணெய் தீபத்துடன், இரண்டாவது கால பூஜை "யஜுர்வேத" பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.



மூன்றாவது கால பூஜை :

இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணெய் தீபத்துடன் "ஸாமவேத " பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்னவென்றால், இதை லிங்கோத்பவ காலம் என்று கூறுவர். இந்த காலத்தில் தான் சிவபெருமானின் அடி மற்றும் முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மஹா விஷ்ணு வராக அவதராம் எடுத்து பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காவது கால பூஜை:

இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்டை  பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து "அதர்வண வேத" பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.
மஹா சிவ ராத்திரி விரத முறை :
விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
நடைமுறையில் ஒவ்வொரு கோவிலிலும், சிறிது கால வித்தியாசம் பின்பற்றப்படுவதால் இங்கே நான்கு காலங்களுக்கு உண்டான நேரத்தை குறிப்பிட வில்லை. 
லிங்கோத்பவ காலம் இரவு 11:30 முதல் 12:15 வரை என்று கணக்க்கிட்டுகொள்ளலாம். 


Editor Note: வயதானவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்கள் மேலும் பல்வேறு அலுவல்கள் காரணமாக மஹா சிவராத்திரி விரதம் இருக்க முடியாதவர்கள், தனது உடலை வருத்தி விரதம் இருக்க வேண்டும் என்பதல்ல... அதற்க்கு மாறாக, மஹா சிவ ராத்திரி விரதத்தின் தாத்பரியத்தை (The interior and deep understanding about the Fasting & Awakening) உணர்ந்து  கொண்டு, முழு சரணாகதி அடைந்து,


த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
                                         த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
                                                  ஏகபில்வம் சிவார்ப்பணம் ...   

என்னும் மந்திரத்தை கூறி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்கள் அழிந்து விடும். 

வாய்ப்பு இருப்பின், சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

நமது மனம் போனபடி அலையாமல், புலன்களை கட்டுபடுத்துவற்கே விரதம் தேவைப்படுகிறது. மேலும், மஹா சிவ ராத்திரி அன்று, வழக்கமான தாமச குணத்தில் இருந்து விடுபட்டு (தூக்க நிலை) விழிப்பு நிலை அடையவே  நாம் உறங்காமல் இருந்து இறை நிலையை உணர முயற்சிக்கிறோம். 

வெறுமனே, உறங்காமல் இருத்தல் என்று அதற்கு பொருள் அல்ல... (சினிமா படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடி உறங்காமல் இருப்பது, வெட்டி அரட்டை அடித்து நேரத்தை கடத்துவது என்பது விரதத்தின் எந்த வகையிலும் சேர்த்தி கிடையாது) 

அன்று நாம் உணர முற்பட வேண்டியது மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலை என்பதே ஆகும். 

இது கலி யுகம்: இந்த யுகத்தில் அனைத்துமே "நாம ஸ்மரணை" மூலமே அடைய முடியும் என்பது பல யுகங்களுக்கு முன்பே விதிக்கப்பட்டது... ஆகவே சிவன் நாமம் ஜபித்து (சிவாய நம, சிவாய நம, சிவாய நம...)
வாழ்வில் வளம் பல பெறுவோம்...

பின் குறிப்பு:
இந்த சிறியவனின் தனிப்பட்ட கருத்து: (தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...)
"நாம ஸ்மரணை" என்பதற்கு இடைவிடாது ஜபிப்பது என்று பொருள். தற்பொழுது நடக்கும் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் உண்ணா விரதம் போன்றவற்றில் கூட இதனை தான் கடை பிடிக்கின்றனர் அவர்களின் முயற்சி வெற்றி பெறுவதற்கு... (அன்னா ஹசாரே உட்பட) [எந்த அரசியலாகவும் இருக்கட்டும், மாநிலமோ அல்லது மத்திய அரசோ]. 

நமது சாஸ்திரங்களை அரசியல்வாதிகள்  புரிந்து கொண்ட அளவு நாம் புரிந்து கொள்ள வில்லையோ ??? முயற்சிப்போம்...

ஓம் சிவாய நம !!!
வாழ்க வளமுடன் !!!
Pictures Courtesy: Thanks to Shri. Krish Iyer, Vadodhara, Gujarat.

Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க...

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக...

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் ...

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அ...

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: May...

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் ...

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and ...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டன...