மெய்யன்பர்களுக்கு வணக்கம் ...
Please go to the bottom of this page to read the same Article in English. Thank you.
இந்த blog ஆரம்பித்தவுடன் முதல் பதிவு (Article) திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் பற்றியது. அதனை பார்த்தவுடன் ஒரு வார காலத்திற்குள் மிக நல்ல வரவேற்பு நெல்லையை சுற்றியுள்ள மக்களிடம் இருந்து கிடைத்தது. அதற்கு நாங்கள் (kadavuleh blog) முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
முக்கியமாக நெல்லை பக்த பேரவைக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நெல்லையப்பர் கோவில் பற்றிய பதிவுக்கு:
இதனை பார்த்த பின்பு நெல்லையை சுற்றியுள்ள மேலும் பல கோவில்களில் இருந்து நமது குழுவுக்கு (kadavuleh blog Team) அழைப்பு வந்துள்ளது. முக்கியமாக மிகவும் சக்தி வாய்ந்த ஆனால் மிகவும் வெளி உலகிற்கு தெரியாத கோவில்கள் . (ஆன்-லைனில் அதிகம் வராத).
அவற்றில் முதலாவதாக செப்பறை நடராஜர் திருக்கோவில் :(திருநெல்வேலியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது)
இத்திருக்கோவில் "ஆருத்ரா தரிசனத்திற்கு" மிகவும் புகழ் பெற்றது. (இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் 08-01-2012. (Sunday)) "ஆருத்ரா" சிதம்பரத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடை பெறுவது நம் அனைவர்க்கும் தெரிந்து இருக்கும். ஆனால், தென் சிதம்பரம் (அ) தென் தில்லை என்று அழைக்கப்படும் "செப்பறை " திருத்தலம் இப்பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது.
தில்லைக்கும் (சிதம்பரம்) - நெல்லைக்கும் மிகபெரும் தொடர்பு உள்ளது.
சிதம்பரத்தில் வடிக்கப்பட்ட முதல் நடராஜர் சிலை இங்கு "செப்பறையில்" தான் உள்ளது என்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
இக்கோவிலை பற்றிய (ஸ்தல புராணம்) ஒரு செய்தி தொகுப்பு தயாரிக்கும் வாய்ப்பு நமது குழுவுக்கு கிடைத்திருகிறது.
நமது blog ஆரம்பித்து ஒரு வார காலத்திற்குள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. பெருமை என்பதை விட மிகபெரிய பாக்கியமாக, ஆண்டவன் அருள் ஆசியாக இதனை நாம் கருதுகிறோம். ஆண்டவன் வழி காட்டுதலின் படியும், செப்பறை ஆலய நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடனும், kadavuleh blog Team முடிந்தவரை மிகவும் சிறப்பாக இந்த சேவையை செய்து இருக்கிறது.
செப்பறை கோவில் ஸ்தல புராணம் தனிபதிவாக ஒரு சில தினங்களில் வெளி வரும்.
மேலும் அழியாபுரிஸ்வரர், கடைய நல்லூர் கடகாளிஸ்வரர் கோவில் புராணங்கள் விரைவில்...
இதற்காக நமது குழு உறுப்பினர்கள் திரு. கோமதி ஷங்கர், (Computer Graphics Specialist) திரு. முத்து கிருஷ்ணன் (Digital Photographer) மற்றும் திரு. வேலாயுத ராஜா (Digital Videographer) அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நெல்லை மற்றும் அதன் சுற்று பகுதி மக்கள் தவறாது செப்பறை திருக்கோவில் "ஆருத்ரா தரிசனத்தில்" கலந்து கொண்டு "ஆடற் கூத்தனின்" அருள் பெற்று உய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.
பி.கு: பத்தாயிரத்திற்கும் அதிகமான மெய்யன்பர்கள் திருவாதிரை அன்று இங்கு கூடுவர்.
சிவாய நமக !!!
சிவாய நமக !!!
Please read the above article in ENGLISH:
Our first article in this blog is about “Swami Nellaiyappar Temple” along with the small video clipping. After seeing this, with in one week we got very good response from many Temples and Devotees in and around Tirunelveli. We got an opportunity to prepare the “Sthala Puranam” for few temples including Azhiya Patheeswarar, Sepparai Natarajar Temple and Kadaiya Nallur Kadagaliswarar Temple.
Kadavuleh blog team feel very proud and more than that we feel it is the Grace and Blessings of Lord Shiva to us.
In and around Tirunelveli, many ancient Temples are there. Many temples having very old history but unfamiliar to the world. We “kaduvleh blog” are thinking to explore to the world about the powerful temples which are not very familiar. (Not available in web) Lets see how the Almighty is channelizing us. Because nothing is in our hands.
For an example, “Sepparai” Temple which is only 8 KM away from Tirunelveli is having very old history and it is very famous for Arudra Dharshan (This Year Arudra Dharshan falls on 08th January 2012). It has the equal history of Chidambaram. That is why this place is also called as “South Chidambaram” or “South Thillai”. It is unbelievable that, the first Copper Statue which has been prepared for Chidambaram Temple is in “Sepparai” Temple only. Morethan 10,000 people will attend Arudra Dharshan festival.
Almighty blessed us and gave the opportunity to prepare the “Sthala Puranam” (in a CD form) about this temple after we started this “Kadavuleh Blog”. We have completed with maximum care to avoid mistake and to provide with quality. It has come really excellent manner. Very soon it will be uploaded in to our site for our viewers.
Our heartfelt thanks to our Team Members, Mr. Gomathi Shankar (Computer Graphics Specialist), Mr. Muthu Krishnan (Digital Photographer) and Mr. Velayutha Raja (Digital Videographer) for doing the excellent work.
We request everyone to attend "Thiruvathirai" function at South Chidambaram (Sepparai) on 08th January 2012 and attain the Grace from Dancing Lord Shiva.
Few pictures about Sepparai Temple for your views are available above:
Shivaya Nhamaha !!!
BASH! BASH! ROMBA NANNAYERUKKU!!
ReplyDeletePRAMATHAPADUTHEEDEL!
THODARATTUM THIRUPPANIKAL.
SUPERP.....
ReplyDeleteThanks
ReplyDeleteDGS
VR
MK
தெய்வ பக்தி வளர்ந்தால்,தேசபக்தியும்தானாகவே வளரும்;தெய்வ பக்தியை இணைய உலகில் தூண்டுவதற்காக தங்களைப் பாராட்டுகிறேன்.உங்களின் இந்த சேவை உலகமெல்லாம் பரவட்டும்.ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்
ReplyDeleteஆன்மிக கடல் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteGreat and nice
ReplyDelete