வாழ்க வளமுடன் ! ! !
சபரி மலை தகவல்கள்:
English Version is available in end of this Article:
சபரி மலை தகவல்கள்:
English Version is available in end of this Article:
நமது நண்பர்கள் சிலர் 16-01-2012 காலை சபரி மலை ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு வந்தனர். மேலும் ஒரு சிலர் 17-01-2012 அன்று தரிசனம் செய்து விட்டு வந்தனர்.
அவர்களிடம் உரையாடிய பொழுது கிடைத்த தகவல்கள்;
- தற்பொழுது அவர்கள் மேல் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்பட வில்லை. (முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பாக). (அவர்கள் சென்றது தென்காசி, செங்கோட்டை, பத்தனம் திட்டா, பம்பா வழியாக ).
- 16-01-2012 அன்று காலை, (7 மணிக்கு) கூட்டம் மிக மிக குறைவாகவே இருந்துள்ளது. அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாகவே தரிசனம் செய்து முடித்து விட்டனர்.
- ஆனால், 17-01-2012 அன்று காலை 3 மணிக்கு தரிசனத்திற்கு சென்றவர்கள் காலை 11 மணிக்கே தரிசனம் செய்ய நேர்ந்தது.
- ஆன்லைன் புக்கிங் இன்னும் பிரபலம் அடையாத காரணத்தால் பலர் அந்த வசதியை உபயோகிக்க வில்லை. (ஆன்லைன் புக்கிங் இரண்டு மாதங்கள் முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது)
- இந்த சேவை கேரள போலீசாரால் செய்யபடுகிறது. தற்பொழுது ஆன்லைன் புக்கிங் சேவை இலவசமாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு முதல் அதற்கு ருபாய் 100 வசூல் செய்யப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நமது வாசகர்களுக்காக, தற்போதைய புக்கிங் நிலவரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக தகவல்களுக்கு (அ) ஆன்லைன் புக்கிங் செய்வதற்கு:
குறிப்பு: இருமுடி கட்டுடன் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த புக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐய்யப்பா !!!
Sabari Mala - Few Information:
Few of our friends have visited Sabari Mala by 16-01-2012 and 17-01-2012 morning for Iyyappa Darisan with Irumudikattu.
- As per them, presently there is no attack on Pilgrimage by Kerala People. (With regards to Mullai Periyar Dam Problem) ( They have used Tenkasi, Senkottai, Patthanamthitta and Pamba route)
- The first group have visited on 16th morning (07:00 AM) and no heavy rush in the temple. They were able to finish the Darshan with in two hours.
- The Second group have visited on 17th morning (03:00 AM) and they were able to finish the Darshan only by 11:00 AM.
- Many peoples are not aware of Online booking system since it has been introduced only two months back. Hence not too much crowd in online 'Q'.
- The Online 'Q' booking system is running by Kerala Police and presently it is free service only. But it may be charged in due course.
The present status of Online booking has been given above for our viewers. (Please see the image)
Pilgrimage can book the Online ticket in the below link. (This facility is limited to devotees who are coming with "Irumudikattu")
Swamiye Saranam Iyyappa !!!
Comments
Post a Comment